இந்தியாசெய்திகள்

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி!!

Astrology

மேஷம்
aries-mesham
இன்று வளமும் பெறும் இனிய நாள். வியாபாரப் பயணங்களால் இலாபம் ஏற்படும். அழகிய பெண்களின் சிநேகமும், அழகான தனி வீடு அமையும். சுப காரியங்கள் நிறைவேறும்.

ரிஷபம்
taurus-rishibum
கௌரவக் குறைவு ஏற்படுத்தும் செயல்களைத் தவிருங்கள். விபத்து ஏற்படாதிருக்க பயணத்தின் போது எச்சரிக்கை தேவை. மனஅமைதி பெற தியானம் செய்க.

மிதுனம்
gemini-mithunum
வியாபாரத்தில் ஏற்படும் இடைஞ்சல்களை தவிர்க்கப் பணியாளர்கள் ஒத்துழைப்புத் தேவை. தாயின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தன்னம்பிக்கை இழக்காதீர்கள்.

கன்னி
virgo-kanni
எதிர்பார்த்த இடங்களில் இருந்து தனவரவு உண்டாகும். புத்தாடை அணிகலன்கள், வாசனைத் திரவியங்களும் சேரும். வாய்க்கு ருசியாக நல்லுணவுக்குக் குறைவிருக்காது.

மகரம்
capricorn-magaram
தெய்வபக்தி மேலிட தெய்வீக காரியங்கள் ஈடேறும். எல்லாவற்றிலும் எளிதில் வெற்றி கிடைக்கும். மனைவியின் உதவி பெற்று மகிழ்வீர்கள். தன்னம்பிக்கை கூடும்.

கடகம்
cancer-kadagam
மனம் கோணாதபடி பணிவிடை செய்யும் மனைவியின் உதவி கிடைக்கும். பல வழிகளில் வருமானம் பெருக மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும். சகோதர நன்மை உண்டு.

சிம்மம்
leo-simmam
நல்ல வருமானம் வருவது போல் தோற்றமளிக்கும். தொழில், வியாபாரத்தில் புதிய முதலீடுகளை தவிர்கவும். பதவி அல்லது இட மாற்றங்கள் ஏற்படலாம்.

துலாம்
libra-thulam
பெண்களால் விரயச் செலவுகள் ஏற்படும். வீண் வம்புக்கு செல்லாதிருப்பது நல்லது. மாற்றங்கள் நிகழும். குறிக்கோளின்றி மனம் போன போக்கில் அலைய நேரும்.

மீனம்
pisces-meenam
பணவரவு உண்டு. தொழில் வளம் பெருகும். எதையும் துணிச்சலோடு எதிர் கொள்வீர்கள். வரும் வாடிக்கையாளர்களின் மனம் அறிந்து செயல்பட்டால் வியாபாரம் பெருகும்.

தனுசு
sagittarius-thanusu
நினைத்த காரியங்கள் நடக்கும். வாழ்க்கையில் முன்னேற்றங்கள், புதிய திருப்பங்கள் ஏற்படும். பிறருக்குக் கட்டளை இடும் படியான அதிகாரமுள்ள பதவிகள் கிடைக்கும்.

விருச்சிகம்
scorpio-viruchagam
தனலாபமும், எல்லா வகையிலும் நன்மையும் ஏற்படும். கல்வியில் வெற்றி கிடைக்கும். கௌரவம், மதிப்பு மரியாதை கூடும். பெண்களால் உதவியும் பிரிந்திருந்தவர் கூடியும் மகிழ்வர்.

கும்பம்
aquarius-kumbam
எதிலும் நேர்மையாக நடக்க வேண்டிய நாள். தவறு செய்தால் தண்டிக்க படுவீர்கள். உயர்வு வரும்போது பணிவு வேண்டும். அதிகாரிகளிடம் பணிவாக நடந்தால் அனுகூலம் ஏற்படும்.

நன்றி – தினபூமி

Related Articles

Leave a Reply

Back to top button