அரச நிறுவனங்களின் தலைவர்களுக்கு ஜனாதிபதி முக்கிய அறிவிப்பு!!
Government office
அரச நிறுவனங்களின் தலைவர்களுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கே முக்கிய அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளார்,
அதன்படி, அரச செலவினங்களைக் கட்டுப்படுத்துவது தொடர்பான திறைசேரியின் செயலாளரின் சுற்றறிக்கையின் விதிகளை நடைமுறைப்படுத்துவது கட்டாயமாகும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரசாங்க நிறுவனங்களின் தலைவர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
அத்துடன் ‘அரச செலவினங்களைக் கட்டுப்படுத்துதல்’ என்ற தலைப்பில் திறைசேரி செயலாளரால் குறிப்பிடப்பட்ட 26-04-2022 தேசிய வரவு செலவுத் திட்ட சுற்றறிக்கை இலக்கம் 03/2022 இன் விதிகளின்படி அனைத்து அரச நிறுவனங்களின் தலைவர்களும் செயற்பட வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளதாக ஜனாதிபதியின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
அனைத்து அமைச்சின் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள், மாவட்ட செயலாளர்கள் மற்றும் அரச கூட்டுத்தாபனங்கள் மற்றும் சபைகளின் தலைவர்களுக்கு இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க கடிதம் ஒன்றை அனுப்பி இந்த அறிவித்தலை விடுத்துள்ளார்.
அதற்கமைய, மேற்படி சுற்று நிருபங்கள் கண்டிப்பாக பின்பற்றப்பட வேண்டும் எனவும், இதற்கு மேலதிகமாக செலவுகள் ஏற்பட்டால். உரிய அமைச்சுச் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள், அரச கூட்டுத்தாபனங்கள் மற்றும் சபைகளின் தலைவர்கள் தனிப்பட்ட முறையில் பொறுப்பேற்க வேண்டும் எனவும் கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.