எரிபொருள் வழங்குவதற்காக இந்தியா, இலங்கையிடம் முன்பணத்தைக் கோரியுள்ளதாக புளூம்பெர்க் தகவல் வெளியிட்டுள்ளது.
இலங்கைக்கு இந்தியா வழங்கிய கடன் வசதி முடிவடைந்ததை அடுத்து இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக இந்தியத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேசமயம் இலங்கை எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக எரிபொருளை கொள்வனவு செய்வதற்கான வெளிநாட்டு கையிருப்பு இல்லாத காரணத்தினால், இலங்கைக்கு மேலும் எரிபொருள் கடனை வழங்குவதை இந்தியா இடைநிறுத்தியுள்ளதாக அந்த அறிக்யைில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் செலுத்த வேண்டிய பணம் செலுத்தப்படும் வரை பல எரிபொருள் கப்பல்களை தடுத்து வைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.
இலங்கைக்கு கிடைக்கவுள்ளதாக கூறப்படும் அடுத்த நான்கு எரிபொருள் தாங்கிகள் முன்பணத்தை உறுதிப்படுத்துவதற்காக காத்திருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
இலங்கை மிக நெருக்கடியான நிலையை எதிர்கொண்டுள்ள இவ் வேளையில் இந்தியாவின் இந்த முடிவு இலங்கை மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது என கூறப்படுகிறது.