தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மாணவர்களின் கல்வி நடவடிக்கையும நடவடிக்கையைப் பாதிக்காது என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த கூறியுள்ளார்.
தரம் 5 , புலமைப்பரிசில் பரீட்சைகளைக் கருத்தில் கொண்டு கல்வி நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுப்பது குறித்து அவதாரம செலுத்தவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
2022 ஆம் ஆண்டின் முதலாம் தவனையின் 23 நாட்களில் 14 நாட்களே பாடசாலைகளின் செயற்பாடுகள் நடைபெற்றன.
2 ஆம் தவணையில் தற்போது 24 நாட்கள் உள்ளன. எனவே, எஞ்சிய தினங்களையும் சேர்த்து ஒக்டோபர் வரையான காலப்பகுதியில் 44 நாட்கள் பாடசாலையின் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும்.
இவ்விடயம் தொடர்பில் அதிகாரிகளுடன் பேசவுள்ளோம் எனவும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு நேர தாமதம், சீருடை, காலணி போன்ற விடயங்களில் சலுகைகள் வழங்குவது குறித்த கோரிக்கைகளை முன்வைக்கவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.