(நமது விசேட செய்தியாளர்)
“இலங்கை மக்கள், அமைதியான முறையில் எதிர்ப்பை வௌிப்படுத்துவது அவசர நிலைமையல்ல.”
- இவ்வாறு இலங்கைக்கான ஐக்கிய நாடுகளின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் ஹனா சிங்கர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் மக்கள் முன்னெடுக்கும் போராட்டத்துக்குக் காரணமான விடயங்களைத் தீர்க்க முயல வேண்டும் எனவும் அவர் ருவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
ஜனாதிபதி மற்றும் அரசுக்கு எதிராகப் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நேற்று நள்ளிரவு முதல் அவசரகாலச் சட்டத்தை அமுல்படுத்தியுள்ளார்.
இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தே இலங்கைக்கான ஐக்கிய நாடுகளின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மேற்கண்டவாறு கருத்து வெளியிட்டுள்ளார்.