இலங்கைசெய்திகள்

மக்கள் குடியிருப்பு பிரதேசத்தில் டயலொக் கோபுரம்- எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்!!

Demonstration

மட்டக்களப்பு காத்தான்குடி 2ம் குறிச்சி வாவிக் கரையோரம் அமைக்கப்படவுள்ள டயலொக் கோபுரத்தை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வெள்ளிக்கிழமை(14) பொது மக்கள் ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர்.

பொது மக்கள் குடியிருக்கும் இப்பகுதியில் இந்த கோபுரத்தை அமைக்க கூடாது என இதன் போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொது மக்கள் வேண்டுகோள் விடுத்தனர். பொதுமக்கள் சிறுவர்கள் சுலோகங்களை தாங்கியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

குறித்த இடத்தில் கோபுரம் அமைக்கப்படுவதால் பொதுமக்களும் சிறுவர்களும் பாதிக்கப்படுவதாகவும் குறித்த இடத்தில் சிறுவர் பூங்கா ஒன்றை அமைத்து தருமாறும் காத்தான்குடி நகரசபைத் தவிசாளரிடம் வேண்டுகோள் விடுப்பதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் தெரிவித்தனர்.

ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுக் கொண்டிருந்த போது அங்கு வருகை தந்து குறித்த பகுதி கிராம உத்தியோகத்தர்அதிகாரி இது தொடர்பாக காத்தான்குடி பிரதேச செயலாளர் உரிய மேலதிகாரிகளுக்கு அறிவித்துள்ளதாகவும் அதனால் ஆர்ப்பாட்டத்தை கைவிடுமாறும் கேட்டுக் கொண்டார். இதையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனர் .

செய்தியாளர் – சக்தி

Related Articles

Leave a Reply

Back to top button