பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் அரசின் வீண் செலவுகள் வரையறையற்ற வகையில் காணப்படுகின்றன என்று ஆளும் தரப்பு பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.
நெருக்கடிகளுக்குத் தீர்வு காண்பதற்காக, சர்வதேச நாணய நிதியத்தை நாடினால் அது நீண்டகாலப் பிரச்சினையை ஏற்படுத்தும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“குறுகிய கால பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வு காண அரசு சர்வதேச நாணய நிதியத்தை நாடினால் அது நீண்ட காலப் பிரச்சினைகளைத் தோற்றுவிக்கும்.
சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகள் அரசை நெருக்கடிக்குள்ளாக்கும் வகையில் காணப்படும்.
இந்த ஆபத்தான நிலைமையை உணர்ந்து அரசு செயற்பட வேண்டும்” – என்றார்.
செய்தியாளர் – சுடர்