ஒரே நேரத்தில் 4 டிவைஸ்களில் பயன்படுத்தும் வாட்ஸ்அப்பின் புது அப்டேட்!!!
இனி 4 டிவைஸில் வாட்ஸ்அப் பயன்படுத்தலாம்..! Whatsapp New Update..!
ஸ்மார்ட் போன் வைத்திருக்கும் அனைவரிடமும் வாட்ஸப் செயலி இல்லாமல் இருப்பதில்லை. இந்த வாட்ஸ்அப் செயலி மூலம் நண்பர்களிடம் சுலபமாக மெசேஜ் செய்யும் வசதி, புகைப்படம், விடீயோக்கள் எளிதான முறையில் அனுப்புவதற்கு இந்த செயலி மக்களின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இப்போது வாட்ஸ்அப் செயலியை ஃபேஸ்புக் நிறுவனம் வாங்கிய பிறகு பல மாற்றங்களும், புதிய புதிய அப்டேட்களும் ஃபேஸ்புக் நிறுவனத்தால் கொண்டுவரப்பட்டது. சரி இப்போது வாட்ஸ்அப் செயலியின் புதிய அப்டேட் பற்றிய தொழில்நுட்ப செய்திகளை விரிவாக படித்து தெரிந்துகொள்ளுவோம்..!
இப்போது வாட்ஸ்அப்பின் புதிய அப்டேட் ஒரே நேரத்தில் நான்கு ட்வைஸ் பயன்படுத்தி வாட்ஸ்அப்பை பயன்படுத்தும் புதிய அப்டேட் விரைவில் வரவுள்ளது. “Multiple Devices Support” என்ற அப்டேட்டை விரைவில் கொண்டு வருவதற்காக வாட்ஸ் அப் செயலி தீவிர ஆர்வம் காட்டி வருகிறது.
தற்போது உள்ள வாட்ஸ் அப் செயலியில் ஒரு மொபைலில் மட்டுமே வாட்ஸ் அப் பயன்படுத்த முடியும். கணினியில் WhatsApp web மூலமும் பயன்படுத்தலாம்.
ஆனால் வரவிருக்கும் புதிய அப்டேட்டில் 4 டிவைஸ்களில் வாட்ஸ்அப்பை பயன்பாட்டில் உள்ள அதே எண்ணுடன் பயன்படுத்தும் அப்டேட்டை கொண்டுவர உள்ளது. வாட்ஸ்அப் நிறுவனமானது “Linked Devices” என்ற ஆப்ஷன் மூலம் செயல்படுத்தப்பட்டுள்ளது.