உலகம்செய்திகள்தொழில்நுட்பம்

பேஸ்புக்கின் புதிய பெயரை அறிவித்தார் மார்க்

பேஸ்புக்கின் புதிய பெயர் மெட்டா என அதன் தலைமை செயல் அதிகாரி மார் ஸுக்கர் பேர்க் அறிவித்துள்ளார். சமூக வலைதளங்களில் உலகின் முன்னணி நிறுவனமாக பேஸ்புக் காணப்படுகின்றது. உலகம் முழுக்க கோடிக்கணக்கானோர் பேஸ்புக் தளத்தைப் பயன்படுத்தி வருகின்றனர்.

Facebook's rebrand inspires Meta jokes

சில வாரங்களுக்கு முன் தொழில்நுட்ப கோளாறு காரணமாக உலகம் முழுவதும் பேஸ்புக் மற்றும் அந்நிறுவன சேவைகள் முடங்கின. இதனால் பேஸ்புக்கின் பெயரை மாற்ற அதன் தலைமை செயல் அதிகாரி மார்க் ஸுக்கர்பேர்க் முடிவு செய்த செய்திகள் கடந்த வாரங்களில் வெளியாகியிருந்தது.

இந்நிலையில், பேஸ்புக் நிறுவனத்தின் வருடாந்த இணைப்பு மாநாடு வியாழக்கிழமை (28) நடைபெற்றது. அப்போது பேசிய மார்க் ஸுக்கர்பேர்க் பேஸ்புக் நிறுவனத்தின் பெயரை மெட்டா என மாற்றி உள்ளதாக அறிவித்தார்.

“ சமூக பிரச்சினைகளுடன் போராடி பல விடயங்களை கற்றுக் கொண்டோம். கற்றுக் கொண்ட அனைத்தையும் கொண்டு புதிய அத்தியாயத்தை உருவாக்க வேண்டிய நேரம் இது” என தெரிவித்தார்.

இதேவேளை, “ தங்கள் செயலிகளும் குறிப்பாக வட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் போன்றவற்றின் பிராண்ட் பெயர்களும் மாறவில்லை என்றார்.

Facebook renames itself Meta amid controversy - CNET

Related Articles

Leave a Reply

Back to top button