இலங்கைசெய்திகள்

மட்டுவில் கல்விச்சிகரத்தின் சேவை நயப்புவிழா

மட்டுவில் வடக்கு அ.த.க பாடசாலையின் முன்னாள் ஓய்வு பெற்ற அதிபரும், பிரபல சமூக சேவகருமான சரவணை கிருஷ்ணன் அவர்களின் சேவை நயப்பு விழா நாளை (21) மட்டுவில் வடக்கு அ.த.க பாடசாலை மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

நாளை பி.ப 2.30 மணியளவில் இவ்நிகழ்வு இடம்பெறவுள்ளது. விழா நாயகன் விழா மேடைக்கு வரவேற்கப்பட்டு, ஆசியுரைகள், வாழ்த்துரைகள் இடம்பெற்று, விழா நாயகன் கெளரவிக்கப்படவுள்ளார்.

விழா நாயகன் மட்டுவில் தெற்கு கிராமத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், மட்டுவில் வடக்கு வாழ் மாணவர்களின் கல்வியில் முப்பது வருடத்திற்கு மேலாக தனது சேவையை வழங்கிவருவதாகவும், மட்டுவில் வடக்கு, கிழக்கு கிராம மக்களின் வாழ்க்கையிலும் பல்வேறுபட்ட சேவைகளை ஆற்றி வருவதோடு மட்டுவில் வடக்கு கிராமத்தைச் சேர்ந்த ஒருவராகவே மிளிர்ந்து வருகிறார் என விழா ஏற்பாட்டாளர்களில் ஒருவர் எமது இணையத்தளத்திற்கு தெரிவித்துள்ளார்.

இவரின் சேவைகளையும், உணர்ச்சி மிக்க கடமைகளையும் கெளரவிக்க வேண்டும் என்ற பேராவிலேயே மட்டுவில் வடக்கு பொது அமைப்புக்கள் மற்றும் மக்கள் இணைந்து இவ் நிகழ்வை மேற்க்கொள்வதாக பொதுமகன் ஒருவர் கருத்து வெளியிட்டார்.

இவ் சேவை நயப்பு நிகழ்வை, மட்டுவில் வடக்கு அ.த.க பாடசாலை சமூகம், மட்டுவில் வடக்கு அ.த.க பாடசாசலை பழைய மாணவர் சங்கம், மட்டுவில் மோகனதாஸ் சனசமூக நிலையம், மட்டுவில் மோகனதாஸ் விளையாட்டுக்கழகம், மட்டுவில் வடக்கு – கிழக்கு பொதுமக்கள் எனப்பலர் இணைந்து ஒழங்கமைப்பதில் இருந்தே இவரின் சேவைகளையும், நன்மதிப்பையும் அறியமுடிகின்றது.

நாளை இடம்பெறவுள்ள சேவை நயப்பு விழாவில், கிருஷ்ணன் ஆசானால் உயர்ந்த மாணவர்கள், ஆசானை நேசிக்கும் மாணவர்கள், சமூக ஆர்வலர்கள், கல்வியாளர்கள் அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு ஏற்பாட்டுக்குழுவினர் வேண்டிநிற்கின்றனர்.

Related Articles

Leave a Reply

Back to top button