இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

இன்றைய (04.10.2024 – வெள்ளிக் கிழமை) பத்திரிகையில் முன்பக்கத்தில் இடம்பிடிக்க கூடிய செய்திகள் சுருக்கமாக ஒரே பார்வையில்!!

 1.

வரி நிவாரணம் வழங்க யோசனை – ஐ. எம். எவ் இடம் ஜனாதிபதி தெரிவிப்பு!!

தனது அரசாங்கத்தில் வற் வரி நிவாரணம் வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நாட்டுக்கு வந்துள்ள ஐ. எம். எவ் அதிகாரிகளிடம் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

2.

வேட்புமனு தாக்கல் இன்று முதல் ஆரம்பம்!!

நடைபெறவுள்ள பாராளுமன்ற பொதுத்தேர்தலில் பங்கு பெறும் அரசியல் கட்சிகள் மற்றும் குழுக்கள் தாக்கல் செய்யும்  வேட்பு மனுவை ஏற்றுக்கொள்வது இன்று முதல் ஆரம்பமாகிறது. 

3.

எமது போராட்டம் திட்டமிட்டு ஒடுக்கப்படுகிறது!! 

எமது போராட்டத்தை ஒடுக்குவதற்கு தகட்டமிடப்பட்டுள்ளது என வடக்கு கிழக்கு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். 

4.

மதுபானத்தினால் இவ்வளவு மரணங்களா!! 

நாட்டில்,  மதுபான பாவனையால் தினமும் 30பேர் இறக்கின்றனர் எனவும் ஆண்டுக்கு  பத்தாயிரம் முதல் 20 000 பேர் வரை இறக்கின்றனர் எனவும் புள்ளிவிபரம் தெரிவிக்கின்றது. 

5.

இலங்கைக்கு சர்வதேச கண்காணிப்பு அவசியம்!!

இலங்கை மீது தொடர்ந்து சர்வதேச கண்காணிப்பு அவசியம் எனவும் அதற்கேற்ற பிரேரணை ஒன்றை உருவாக்குமாறும் ஐ. நா. மனித உரிமைகள் பேரவையை சர்வதேச மனித உரிமைகள் பேரவை வலியுறுத்தியுள்றது. 

6.

யாழிவ் இடம்பெற்ற 1 கோடி ரூபா வழிப்பறி!!

மானிப்பாய் – சங்குவேலிப் பகுதியில், காணி விற்பனை செய்து விட்டு வந்து நபர் ஒருவரிடம் ஒரு கோடி ரூபாவை வழிப்பறி செய்த இருவரையும் அதற்கு உடந்தையாகச் செயற்பட்ட நபரையும் பொலிசார் கைது செய்துள்ளனர்.  

செய்தியாளர் – சமர்க்கனி

Related Articles

Leave a Reply

Back to top button