கட்டுரை

நிறை புரிதல் – நீங்களும் அறிந்து கொள்ளுங்கள்!! எழுத்து – அருந்ததி குணசீலன்.

Understanding

சிறு வயதில் புரியாதது…..!!
இப்போது புரிகிறது..!
புரிவது மட்டும் அல்ல சிரிப்பும் வருகிறது. எல்லாம் ஒரு பக்குவம்தான்.
பள்ளியில் படிக்கும் நாட்களில் பென்சில் பாவிக்கும் போது பிரச்சினை தெரியவில்லை. ஏதாவது பிழையாக எழுதினால் உடனே அழித்து விடுவேன்.
ஆனால் பேனாவுக்கு மாறும் போது நான் விடும் பிழைகளை அழிக்க முடிய வில்லை.
ஆசிரியரிடம் எனது கொப்பியை கொடுக்க முன் எப்படியும் அழித்து விடவேண்டும் என்று கஷ்டப்படுவேன்.
அதன் வெளிப்பாடாக எச்சில் கொண்டு அழித்து விடுவேன்.
அதன் விளைவு கொப்பியில் சிறு ஓட்டைகள் விழுந்துவிடும்.
நடுக்கத்துடன் அதை ஆசிரியரிடம் காட்ட…… தாள்களை அலங்கோலமாக்கியதுக்கு என் காதை முறுக்கி நல்ல அடி விழும் எனக்கு.
இவ்வளவும் ஏன் செய்தேன்…??
எனது பிழைகளை மறைக்கவே!!
ஒருநாள் ஒரு நல்ல உள்ளம் கொண்ட ஆசிரியர் ஒருவர்……. அவருக்கு என்னை மிகவும் பிடிக்கும். நான் அடி வாங்குவதை கவனித்து என்னைக் கூப்பிட்டு ஆதரவாகச் சொன்னார்.
இனிமேல் நீ எழுதும் போது பிழை விட்டால் அதன் மேல் ஒரு புள்ளடி போட்டு விட்டு அப்பால் நகரு. நீ விட்ட பிழைகளை அழிக்க முற்படுவது உனது தாள்களைக் கிழிக்குமே ஒழிய வேறொன்றும் இல்லை என்றார்.
அன்பின் வெளிப்பாட்டில் அவர் கூறியது எனது மூளையை தட்டியது.
ஆனால் நான் எதிர்வாதம் செய்தேன்.
நான் விடும் பிழைகளை மற்றவர் பார்ப்பதை நான் விரும்பவில்லை என்றேன்.
என் அன்பு ஆசிரியர் வாய் விட்டுச் சிரித்தார்.
நீ உன் பிழைகளை மறைக்க முயலும் ஒவ்வொரு தருணமும் மென் மேலும் மற்றவர்கள் உன்னை ஊன்றிப் பார்க்க வைக்கும் மகளே..!! என்றார்.
‘ஆம் ……இன்று சரியாகப் புரிகிறது. பழைய ஆண்டில் நாம் விட்ட தவறுகளுக்கு புள்ளடி போட்டுவிட்டு, பிறந்திருக்கும் புது வருடத்தில் புதிய சிந்தனைகளுடன், வஞ்சகமில்லாத அன்பால் இணைவோம்

Related Articles

Leave a Reply

Back to top button