நீர் மின் நிலையங்களில் நீர் மின் உற்பத்தி குறைந்து செல்லும் பட்டசத்தில் மின்வெட்டுக்கான நேரம் அதிகரிக்குமென இலங்கை மின் பொறியியலாளர் சங்கம் எச்சரித்துள்ளது.
இந்த மின்வெட்டானது 5 தொடக்கம் 6 மணித்தியாலம் வரை நீடிக்கலாம் என மின் பொறியியலாளர் சங்கத்தின் தலைவர் செளமிய குமார தெரிவித்துள்ளார்.
மே மாத இறுதிக்குள் நீர் மின் உற்பத்தி போதியளவு அதிகரிக்கப்படாவிட்டால், எவ்வளவு காலம் மின்வெட்டு அமுலில் இருக்கும் எனத் தெரிவிக்க முடியாது அவர் மேலும் தெரிவித்துள்ளார்.