சினிமாசெய்திகள்தொழில்நுட்பம்

குரல் பதிவு மூலம் எண்ணங்களை வெளிப்படுத்தும் புதிய ஹூட் செயலி அறிமுகம்

எழுத,படிக்கத் தெரியாதவர்கள் தங்களது எண்ணங்கள், விருப்பங்கள், யோசனைகளை குரல் மூலம் வெளிப்படுத்த கூடிய புதிய செயலியொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த செயலி குரல் பதிவு மூலம் நம்முடைய கருத்துக்களை பிறருக்குத் தெரியப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

நடிகர் ரஜினி காந்தின் மகள் சவுந்தர்யா விசாகன், அம்டெக்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி சன்னி போகலாவுடன் இணைந்து “ஹூட்” என்ற குரல் அடிப்படையிலான செயலி நிறுவி இன்று தொடங்கி வைத்துள்ளார்.

மேலும் இது குறித்து நடிகர் ரஜினிகாந்த் டுவிட்டரில், இந்த புதுமையான, பயனுள்ள செயலியை என்னுடைய குரலில் தொடங்குவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.

ஹூட் – குரல் அடிப்படையிலான சமூக ஊடக தளம், இந்தியாவிலிருந்து உலகிற்கு’ என்றும் தனது பதிவில் பதிவிட்டுள்ளார்.  

Related Articles

Leave a Reply

Back to top button