அளவில்லா கும்பிக்கு
அன்னமிட்ட அன்னையே,
வெள்ளையம்மா நாமம் தரித்த
எங்கள் தாயே…
முகம் பார்த்து
அகம் உணர்ந்து
ஆறுதல் மொழி கூறும்
அன்னைப் பெருங்கடலே
நீ பெற்றிடாத செல்வங்கள் தான்
எத்தனை..எத்தனை….
காலம் பறித்தெடுத்த
உன் பிள்ளைகளோடு
கலந்திட விரைந்தாயோ
எம் தாயே…
உங்கள் நினைவு
எத்தனை காலமானாலும்
எம்மை விட்டு அழியாது
அம்மாவே. ..
துயரத்தில் தூணாகி அருகிருந்து ஆறுதல் தந்து , அகத்தாலும் புறத்தாலும் உதவிய அத்தனை பேருக்கும் உள்ளம் நிறைந்த நன்றிகளைச் சமர்ப்பிக்கிறோம்.
05.11.2022 நாளை (சனிக்கிழமை ) அன்னாரின் இல்லத்தில் இடம்பெறும் ஆத்மசாந்திப் பிரார்த்தனையிலும் மதிய போசன நிகழ்விலும் கலந்து கொள்ளுமாறு அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.
தகவல் – குடும்பத்தினர்.
மட்டுவில் – சாவகச்சேரி.