
நாட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு பிரதமர் பதவி விலகி இடைக்கால அரசை அமைக்க வேண்டுமென பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி சரித ஹேரத் தெரிவித்துள்ளார்.
பிரதமருடன் தற்போதைய அரசாங்கமும் பதவி விலகி, இடைக்கால அரசு அமைக்கப்பட்டு 8 மாதங்களுக்கு பிறகு தேர்தலுக்கு செல்ல வேண்டுமெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
பெரமுனவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் இடைக்கால அரசாங்கம் அமைக்கப்பட வேண்டுமென தொடர்ச்சியாக வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.