கடந்த வாரம் மூடப்பட்ட பிரதான நகரங்களின் பாடசாலைகள் இனி வாரத்திற்கு 3 நாட்கள் ( செவ்வாய் ,புதன்,வியாழன் ) மட்டும் இயங்கும். ஏனைய கிராம் பாடசாலைகள் கடந்த வாரத்தில் செயற்பட்டமை போன்று தொடர்ந்து செயற்படலாம் எனவும் கல்வியமைச்சு அறிவித்துள்ளது .
எரிபொருள் பிரச்சினையால் அறிவிப்புடன் பாடசாலைக்கு சமூகம் தரமுடியாத ஆசிரியர்களின் லீவை தனிப்பட்ட லீவாக கருத்தாது இருக்கவும் முடிவு செய்ய பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை கிராம பாடசாலைகள் 5 நாட்களும் இயங்கும் எனவும்
ஆரம்ப பாடசாலைகள் எத்தனை நாட்கள் இயங்கும் என்பது தொடர்பாக அதிபர்கள்
முடிவு எடுக்கலாம் எனவும்
கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.