யாழ்ப்பாண கடற்பரப்பில் 123 மில்லியன் ரூபா பெறுமதியான கேரளக் கஞ்சாவுடன் படகு ஓட்டியான 20 வயது இளைஞன் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
யாழ்.கடற்பரப்பில் கடற்படையினர் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த வேளையில், சந்தேகத்துக்கிடமான முறையில் பயணித்த படகொன்றை வழிமறித்து சோதனை மேற்க்கொண்டபோது 492 கிலோ கிராம் கேரளக்கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சந்தேகத்தின் அடிப்படையில் படகு ஓட்டியான 20 வயது இளைஞன் கைதுசெய்யப்பட்டுள்ளார். கைதுசெய்யப்பட்டவரை நீதிமன்றத்தில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை மேற்க்கொண்டு வருகின்றனர்.