தரம் – 5 மாணவர்களுக்கான புலமைப் பரிசில் பரீட்சை நேற்று (22) நாடாளவிய ரீதியில் இடம்பெற்றது.
இந்நிலையில், நேற்று இடம்பெற்ற தரம் 5 பரீட்சையில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளதாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக ஆணையாளர் நாயகம் L.M.D.தர்மசேன தெரிவித்துள்ளார்.
சில பரீட்சை மத்திய நிலையங்களில் நீண்ட நேரத்திற்கு பின்னர் பரீட்சை வினா தாள்கள் வழங்கப்பட்ட போதிலும் விடை எழுதுவதற்கான நேரத்தை மாணவர்களுக்கு வழங்கப்படவில்லை எனவும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
அத்துடன், சில பரீட்சை நிலையங்களில் சுவர் கடிகாரம் காட்சிப்படுத்தப்படவில்லை எனவும், விடை எழுதுவதற்கு தாள்கள் வழங்கப்படவில்லை எனவும், மேற்பார்வையாளர்கள் பக்கச்சார்பாக செயற்பட்டதாகவும் என பல்வேறு குற்றச்சாட்டுக்களை மாணவர்கள் முன்வைத்துள்ளனர்.
இந்நிலையில், மாணவர்களினால் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.