இலங்கைசமீபத்திய செய்திகள்

வடக்கின் சமரில் ஹென்றிஸ், சென்.மேரிஸ் அதிரடி

ஊரெழு றோயல் விளையாட்டு கழகத்தால் வடமாகண ரீதியில் நடத்தப்பட்டு வரும் வடக்கின் சமர் தொடரின் இன்றைய (19) போட்டிகளில் இளவாலை ஹென்றிஸ், நாவந்துறை சென்மேரிஸ் அணிகள் வெற்றி பெற்றுள்ளன.

முதலாவது போட்டியில் உரும்பிராய் திருக்குமரன் வி.கழத்தை எதிர்த்து இளவாலை ஹென்றிஸ் வி.கழகம் மோதியது. அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹென்றிஸ் வி.கழகம் 6:0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

இரண்டாவது போட்டியில் நாவந்துறை சென்.மேரிஸ் வி.கழத்தை எதிர்த்து குருநகர் சென்.றோக்ஸ் வி.கழகம் மோதியது. அதிரடி காட்டிய சென்.மேரிஸ் வி.கழகம் 7:0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

DCIM\100MEDIA\DJI_0446.JPG

Related Articles

Leave a Reply

Back to top button