வாகன இலக்கத்தகட்டினை மாற்றியவருக்கு ஆப்பு – 25000 ரூபா தண்டப்பணம் விதித்தது நீதிமன்றம்
போலியான வாகன இலக்கத்தகட்டினை வாகனத்திற்கு பொருத்தி எரிபொருள் பெற முயற்சித்த வாகனத்தின் சாரதி ஒருவருக்கு கம்மஹா நீதிமன்றம் 25000 ரூபா பணத்தை தண்டமாக விதித்துள்ளது.
நாட்டில் தற்போது வாகன இலக்கத்தின் அடிப்படையில் எரிபொருள் விநியோகம் மேற்க்கொள்ளப்பட்டு வருவதால் பல மாதிரியான உருட்டுக்களை பயன்படுத்தி எரிபொருட்களை பெற வேண்டும் என்று சிந்திப்பவர்கள் பல்வேறு விசித்திரமான மோசடியான சம்பவங்களை செய்து வருகின்றனர்.
அவ்வகையிலேயே மேற்குறித்த சம்பவம் வீரகுள பொலிஸ் பிரிவிட்குட்பட்ட நெல்லிகஹமுல பகுதியில் இடம்பெற்றுள்ளது.
லொறிக்கு டீசலைப் பெற்றுக்கொள்வதற்காக வாகன திருத்தகத்தில் நின்ற லொறியின் வாகன இலக்கத்தகட்டினை மாற்றிப் பொருத்தி டீசல் பெற முற்பட்ட சாரதியே பொலிஸரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப் படுத்தப்பட்ட நிலையில் நீதிமன்றத்தால் தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.