இலங்கைசெய்திகள்பிரதான செய்திகள்

இலங்கையில் சமஷ்டி ஆட்சியை உருவாக்குமாறு அமெரிக்கா உத்தரவிடலாம்

நாட்டில் சமஷ்டி ஆட்சியை உருவாக்குமாறு அமெரிக்கா இலங்கைக்கு உத்தரவிடக் கூடிய அபாயம் உண்டு என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில (Udaya Gammanpila) தெரிவித்துள்ளார்.

கெரவலபிட்டிய யுகதனவி மின்நிலையத்தின் பங்குகள் அமெரிக்காவிற்கு வழங்கப்பட்டமைக்கு எதிர்ப்பு வெளியிடும் வகையில் இன்று கொழும்பில் நடைபெற்ற கூட்டமொன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இராணுவத்திற்கு தண்டனை விதிக்குமாறு கோரும், சமஷ்டி ஆட்சியை நிறுவு எனக் கோரும் அமெரிக்காவிற்கு இந்த திட்டம் வழங்கப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளது.

இலங்கையின் மின்சாரம் உற்பத்தி செய்வதற்கான ஏகபோக உரிமையை அமெரிக்க நிறுவனமொன்றுக்கு ஏன் வழங்க வேண்டுமென அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

விலை மனுக் கோரல் நடைமுறைகள் பின்பற்றாது இவ்வாறு அமெரிக்க நிறுவனத்திற்கு இந்த திட்டம் வழங்கப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்குமாறு கோரிய எமது எதிரி நாடான அமெரிக்காவிற்கு எவ்வாறு இந்த திட்டத்தை வழங்குவது என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

Related Articles

Leave a Reply

Back to top button