செய்திகள்புலச்செய்திகள்முக்கிய செய்திகள்
வளர்மதி சனசமூக வெளிநாட்டு கிளையின் புதிய நிர்வாக தெரிவு!!

மட்டுவில் தெற்கு வளர்மதி சனசமூக நிலையத்தின் கனடா கிளையின் கோடை கால ஒன்று கூடலும் பொதுக் கூட்டமும் 01.07.2025 நேற்றைய தினம் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் புதிய நிர்வாகத் தெரிவு நடைபெற்றது. அதில் ஐந்து பேர் பதவி நிலைகளில் தெரிவு செய்யப்பட்டனர்.
தலைவராக தில்லை நாதன் சமேதன், செயலாளராக சுந்தரலிங்கம் செந்தூரன், பொருளாளராக முத்துராஜா அஜத்துரன், உபதலைவராக பொ. அரிமர்த்தன், உப செயலாளராக சி. திவாகர் என்பவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

மட்டுவில் தெற்கின் அபிவிருத்தியிலும் மட்டுவில் தெற்கு வளர்மதி சனசமூக நிலைய அபிவிருத்தியிலும் தென்மராட்சி மக்களின் பிரதேச அபிவிருத்தி யிலும் மட்டுவில் தெற்கு வளர்மதி சனசமூக நிலைய கனடா கிளையின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது.
இவர்களுக்கு ஐவின்ஸ் தமிழ் இணையதளம் சார்பில் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
….