புலம்பெயர்ந்து நோர்வே நாட்டில் வசித்துவரும் சமூக ஆர்வலர் ஒருவரின் பங்களிப்பில் தற்காலிக வீடு ஒன்று நிறைவாகியுள்ளது.
முன்னாள் போராளி ஒருவர் காயம் காரணமாக நடமாடி வேலை செய்ய முடியாத சூழலில் மிகவும் வறுமை நிலையில் வாழ்ந்து வந்தார்.
அவர்களின் வீடும் மிகவும் பாதிப்புற்ற நிலையில் சிறு பிள்ளைகளோடு அன்றாடம் பல சிரமங்களை எதிர்நோக்கிய நிலையில் அவரிற்கான இந்த தற்காலிக வீட்டினை நோர்வே நாட்டைச் சேர்ந்த சகோதரர் ஒருவர் முன்வந்து அமைத்துக் கொடுத்துள்ளார்.
தொடர்ச்சியாக சமூக சேவைகளைச் செய்து வரும் நல்லுள்ளம்கொண்டவருக்கும் அவரது குடும்பத்து உறவுகளுக்கும் பயனாளர்களும் சமூக ஆர்வலர்களும் தமது நன்றிகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளனர்,
செய்தியாளர் – சமர்க்கனி