Breaking Newsஇலங்கைசெய்திகள்
தாமரைக் கோபுரத்தில் இருந்து குதித்து மாணவி மரணம் – விசாரணைகள் துரிதம்!!
News

16 வயதுடைய மாணவி ஒருவரை கொழும்பு – தாமரைக் கோபுரத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்துள்ள நிலையில்
இதுவரை 05 பேரிடம் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பலத்த காயங்களினால் மரணம் ஏற்பட்டுள்ளதாகப் பிரேதப் பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
15 முதல் 20 நிமிடங்களுக்குள் அவர் பல தடவைகள் குதிக்க முயற்சித்தமை அங்கிருந்த சிசிடிவி கமராக்களில் பதிவாகியுள்ளது.
தற்கொலைக்கான காரணம் வெளியாகாத நிலையில், அண்மையில் அடுக்கு மாடிக் குடியிருப்பில் இருந்து குதித்து மரணித்த மாணவர்களின் தோழி இவர் எனக் கூறப்படுகிறது.
நண்பர்களின் மரணத்தினால் குறித்த மாணவி, மனமுடைந்து காணப்பட்டார் என அவரது தந்தை தெரிவித்துள்ளார்.
செய்தியாளர் – சமர்க்கனி