
முல்லைத்தீவு – முள்ளிவாய்க்கால் கிழக்கு குருந்தடி பிள்ளையார் ஆலய தேர்த் திருவிழாவில் தேரிலுள்ள கலசம் விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
குறித்த சம்பவமானது நேற்றைய தினம் (4) இடம்பெற்றுள்ளது.தேர் வீதி உலா வரும் போது மின் இணைப்பு வயரில் சிக்கி கலசம் கழன்று விழுந்ததில் இந்த அசம்பாவிதம் இடம்பெற்றுள்ளது.
கலசம் சுமார் 50 கிலோ எடையிருக்கும் என கூறப்பட்டுள்ளது.இந்த விடயம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்