இலங்கைசெய்திகள்

இயற்கை எய்தினார் சிரேஷ்ட ஊடகவியலாளர் உயர் திரு ம.வ.கானமயில்நாதன்!!

death

யாழ்ப்பாணத்தின் சிரேஷ்ட ஊடகவியலாளர் ம.வ.கானமயில்நாதன் இன்று காலை இறைவனடி சேர்ந்தார்.


ஈழநாடு செய்தித்தாளில் உதவி ஆசிரியராகப் பணியாற்றி பின்பு தினபதி சிந்தாமணியில் செய்தி ஆசிரியராகச் சேவையாற்றிய உயர் திரு க. ம. கானமயில்நாதன் அவர்கள் பின்பு உதயன் நாளிதழின் பிரதம ஆசிரியராக இதழை ஆரம்பித்து வீறுநடை போட தன் வாழ் நாள் முழுவதையும் அர்பணித்து
எண்ணற்ற ஊடகவியலாளர்களை வளர்த்தெடுத்தார். ஊடகத் துறைக்கான மாண்புகளை சிறப்பித்து தலையங்கங்களைத் தீட்டி தமிழ் மக்களிடையே நன் மதிப்பைப் பெற்றிருந்தார்.

யாழ் மின்சார வீதி ஒழுங்கையிலுள்ள சிறிய வீட்டில் ஏழு ஊடகவியலாளர்களுடன் ஆரம்பித்த உதயன் இன்று நூற்றுக்கணக்கான ஊடகவியலாளர்களுடனும் ஏனைய பணியாளர்களுடனும் தலை நிமிர்ந்து நிற்கின்றது. இவ்வளவு வளர்ச்சிக்கும் இரவு பகல் பாராமல் உழைத்த பெரியார் இவர்தான். கானமயிலநாதன் ஐயா அவர்கள் இன்று எம்மையெல்லாம் துயரத்தில் விட்டுச் சென்றுள்ளார்.

போர்க்காலத்தில் ஊடகப்பணியாற்றியமைக்காக 2013ம் ஆண்டு நவம்பர் 27 அன்று பிரான்ஸின் பாரிஸ் நகரில் எல்லைகளற்ற செய்தியாளர்கள் தன்னார்வ அமைப்பின் விருது வழங்கும் விழாவில் விருது வழங்கி மதிப்பளிக்கப்ட்டார்.

Related Articles

Leave a Reply

Back to top button