இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

இன்றைய (10.09.2024 – செவ்வாய் கிழமை) பத்திரிகையில் முன்பக்கத்தில் இடம்பிடிக்க கூடிய செய்திகள்!!

News

 1.

தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவான பரப்புரையில் தமிழ் அரசு கட்சி!!

இலங்கை தமிழ் அரசுக்கட்சியின் குழு ஒன்று தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவாக பரப்புரை நடத்தவுள்ளதாக கூறப்படுகிறது. 

2.

சகல துறையினரையும் கொண்ட பொறிமுறையே பொறுப்பு கூறலுக்கான தேவை!! 

இலங்கையின் பொறுப்பு கூறலுக்கு பக்கசார்பற்ற – வெளிப்படையான அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய அணுகு முறை அவசியம் என அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. 

3.

நட்ட ஈடு முழுவதையும் கட்டி முடித்தார் முன்னாள் பொலிஸ் மா அதிபர்!!

முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஈஸ்டர் தின தாக்குதலுக்கான நட்டஈட்டினை செலுத்தி முடித்துள்ளார். ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் உச்ச நீதிமன்றத்தால் உத்தரவிடப்பட்ட 75 மில்லியன் ரூபாவை அவர் செலுத்தியுள்ளார்.

4.

யாழ் – நாகை கப்பல் சேவை நான்கு நாட்கள்!!

நாகப்பட்டினம் – காங்கேசன்துறை சேவையில் ஈடுபடும் பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவையை இம்மாதம் 21ஆம் திகதிக்குப் பின்னர் வாராந்தம் 4 நாட்கள் சேவையில் ஈடுபடுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

5.

6 வயதான மட்டு மாணவி சாதனை!!

மட்டக்களப்பைச் சேர்ந்த 6 வயதுடைய காவ்யஸ்ரீ என்ற மாணவி உலக சாதனை ஒன்றை நிலைநாட்டி உள்ளார்.

காவ்யஸ்ரீ , மூன்று, நான்கு, ஐந்து மற்றும் ஆறு வரிசைகளைக் கொண்ட 200 கூட்டல் மற்றும் கழித்தல் கணக்குகளுக்கு 6 நிமிடங்கள் 50 வினாடிகளில் விடையளித்து சோழன் உலக சாதனை படைத்துள்ளார்.

6.

யாழில் குடும்பஸ்தர் சடலமாக மீட்பு!!

யாழ்ப்பாணம் – ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அல்லைப்பிட்டி பகுதியில் இன்றையதினம் (9) குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில்,  அவரது மரணம் கொலையாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

அல்லைப்பிட்டி 3ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த 43 வயதுடைய கஜேந்திரன் என்ற குடும்பஸ்தரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

7.

தேர்தலுக்காக பாடசாலை விடுமுறையா!!

அனைத்து பாடசாலைகளுக்கும் எதிர்வரும் 20ம் திகதி  விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

வரும் 21 ஆம் இலங்கையின் 9 ஆவது ஜனாதிபதி தேர்தல் இடம்பெறவுள்ளது. இந்நிலையில் ஜனாதிபதி தேர்தல் காரணமாக எதிர்வரும் 20ஆம் திகதி பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

8.

புலமைப் பரிசில் பரீட்சை தொடர்பில் வெளியான முக்கிய  அறிவிப்பு!!

2024ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை இலக்காகக் கொண்ட அனைத்து மேலதிக வகுப்புகள், விரிவுரைகள் அல்லது பயிற்சிப் பட்டறைகள் அனைத்தும் எதிர்வரும் 11ஆம் திகதி நள்ளிரவு முதல் நிறுத்தப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

செய்தியாளர் – சமர்க்கனி

Related Articles

Leave a Reply

Back to top button