கட்டுரைகல்விசெய்திகள்புலமைச்சிகரம் அமரர் வே. அன்பழகன் நினைவான கல்வி பகுதி

ஆசிரியர் அமரர் வே. அன்பழகன் அவர்களின் அகவைநாள் நினைவுப் பகிர்வு!!

Artcle

ஆசிரியர் அமரர். வே. அன்பழகன் அவர்களின் அகவைநாள் இன்றாகும்.

இந்நாளில் அவரை நினைவுகூருதல் சிறப்பெனக்கருதி இக்கட்டுரை பிரசுரமாகிறது.

பிறப்பென்பது மானுடர்களான யாவருக்கும் அமைந்ததே. இருப்பினும், அப் பிறப்பினை சிறப்பென மாற்றுவது அவரவர் வாழ்வின் வாழ்தல் முறைகளே ஆகும்.

அவ்விதமாக மனிதனாகப் பிறந்து புனிதனாக அமரத்துவம் அடைந்தவரே ஆசியர் அமரர் வே. அன்பழகன் ஆவார்.

இவருடைய வாழ்க்கை முறையும் மற்றவர்களோடு அவர் பழகும் பாங்கும் மிக அற்புதமானது.

மாணவர்களுக்கான கற்பித்தலுக்கு இவர் கையாளும் உத்திகள் மிக வித்தியாசமான ஒன்று.

கற்பித்தல் சிறப்பாக வேண்டுமெனின் கற்றுக்கொண்டே இருப்பது அவசியம் என்பதை தன் வாழ்நாளில் எப்போதும் கடைப்பிடித்த ஆசிரியர் அன்பழகன் அவர்கள் தமிழ் கல்வி உலகிற்கு கிடைத்த அரும் பொக்கிஷம் என்பது மறுக்கமுடியாத ஒன்று.

இவரை, இவரது கற்பித்தல் உத்திகளை தமிழ் கல்வி உலகத்தினுள் இன்னும் பரவலாக கொண்டு செல்வதன் மூலம் வினைத்திறன் மிக்க மாணவச் செல்வங்களை உருவாக்க முடியும்.

மட்டுவில் மண்ணைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர், மாணவராக இருந்த காலத்திலேயே மிக அருமையான குணங்களுக்குச் சொந்தக்காரர்.

தரம் 5 மாணவர்களுக்கான கற்பித்தல் முறைகளை இவர் தனக்கே உரிய பாணியில் கைக்கொண்டு தனது கற்பித்தலை மேற்கொண்டவர். மாணவர்களோடு, மாணவர்களாக மாறி, சிறார்களுக்கு ஏற்ற வகையிலான உத்திமுறைகளை முன்னெடுத்து கற்பிப்பது இவரது தனித்துவம்.

இவர் இன்று நம் மத்தியில் இல்லை என்றாலும் தமிழ் கல்வி உலகம் என்றுமே மறந்துவிட முடியாத ஒரு அற்புதப் பிறவி இவர்.

என்றென்றைக்கும் இவரது புகழ் மறையாது …மங்காது…

இவரை வளரும் கல்வி உலகிற்கும் மாணவர்களுக்கும் அறிமுகப்படுத்தும் நோக்கில் வருடாந்தம் பத்தாயிரம் வரையான மாணவர்களுக்கு இவரது நினைவாக ஐவின்ஸ்தமிழ் இணையதளம் மற்றும் யூரியூப் தளத்தால் இலவச கருத்தரங்கினை முன்னெடுத்து வருகிறோம்.

அது மட்டுமல்லாது, இவரது குடும்பத்தினர், இவரின் நினைவாக பல நலத்திட்டங்களைச் செய்து வருகின்றனர்.
அதாவது, யாழ். நகர்ப்பகுதியை அண்டிய பல மாணவர்களுக்கு இவரது நினைவாக புலமைப்பரிசில்கள், கல்வி ஊக்குவிப்புகள் வழங்கப்பட்டு வருகிறது.

அத்துடன் இவரது சொந்த இடமான மட்டுவில் கிராமத்தில் இவரதும் இவரது சகோதரரினதும் நினைவாக மயானத்தைச் சுற்றி மதில் கட்டப்பட்டு அழகுற கையளிக்கப்பட்டுள்ளதுடன் அங்குள்ள கல்வி நிலைய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டுள்ளன என அறிய முடிகிறது.

இவரது அகவை நாளான இன்று அவரது நினைவுகளைப் பகிர்வதில் ஐவின்ஸ்தமிழ் தொலைக்காட்சியும் உவகை கொள்வதுடன் அன்னாரது ஆத்மாசாந்திக்காகவும் பிரார்த்திக்கிறோம்.

நன்றி.

தொகுப்பு – சமர்க்கனி

Related Articles

Leave a Reply

Back to top button